Skip to main content

இலங்கைக்குள் குவியும் டொலர்கள்! எப்படி தெரியுமா?

Feb 22, 2022 84 views Posted By : YarlSri TV
Image

இலங்கைக்குள் குவியும் டொலர்கள்! எப்படி தெரியுமா? 

 இலங்கைக்குள் உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் டொலர்கள் குவிந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் நாள் தோறும் சட்டவிரோதமாக பத்து மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகவும் கூறப்படுகிறது.



அதன்படி இத்தாலி, டுபாய், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்டனவற்றிலிருந்து இவ்வாறு பணம் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.



இந்நிலையில் உண்டியல் மற்றும் ஹவாலா முறைமைகள் சட்டவிரோதமானவை என்ற காரணத்தினால் இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.



இந்த சட்டவிரோத கொடுக்கல் வாங்கல் முறைமை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்ற போதிலும் இந்த உண்டியல் மற்றும் ஹாவாலா முறைமையுடன் அரசியல்வாதிகள், வங்கி அதிகாரிகள், வர்த்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்புபட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.



இதன் காரணமாகவே உண்டியல் மற்றும் ஹாவலா குறித்து கிரமமான விசாரணை நடத்தப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வெகுவாக அதிகரித்துள்ள போதிலும் அது இற்றைப்படுத்தப்படாது 203 ரூபா என்ற தொகையில் தொடர்ந்தும் மத்திய வங்கி பேணி வருகின்றது.



எனினும் சந்தையில் டொலர் ஒன்று 243 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றதாகவும் , உண்டியில் முறையில் இந்த கூடுதல் தொகை கிடைக்கப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



இந்த நிலையில் உண்டியல் முறை குறித்து சுயாதீனமான அடிப்படையில் விசாரணை நடத்தப்படுவதில்லை என தென்னிலங்கை ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை