Skip to main content

உக்ரைன் மக்களை சோகத்தில் மூழ்கடித்த சம்பவம்

Mar 10, 2022 91 views Posted By : YarlSri TV
Image

உக்ரைன் மக்களை சோகத்தில் மூழ்கடித்த சம்பவம் 

உக்ரைன் - ரஷ்யா போர் இன்னும் முடிவடையாத நிலையில் மக்களை பாதுகாக்கும் விதமாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 33 வயதான நடிகர் பாஷா லீ ( Pasha Lee)  போரில் உயிரிழந்துள்ளமை அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



ரஷ்யா ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக மக்களையும் அணிதிரளுமாரு அந்நாட்டு அதிபர் அழைப்பு விடுத்த நிலையில் 33 வயதான நடிகர் பாஷா லீ ( Pasha Lee)  ராணுவத்தில் இணைந்து பணியாற்றி வந்துள்ளார்.



இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய ராணுவ வீரர்களால் அவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் அவரது  ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



முன்னதாக, கடந்த சனிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ( Pasha Lee) வெளியிட்டுள்ள கடைசி பதிவில், “கடந்த 48 மணி நேரத்தில் எங்கள் நாட்டில் எப்படி குண்டு வெடிக்கிறது என்பதை அமைதியாக உட்கார்ந்து புகைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.



நாங்கள் சிரிப்பதற்கு, எங்களால் அதை சமாளிக்க முடியும் என்பதே காரணம். உக்ரைன் மக்களே, நாங்கள் இருக்கிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.



இந்நிலையில் நடிகர் பாஷா லீ( Pasha Lee) , இப்படி பதிவிட்டு அடுத்த நாளே ரஷ்ய ராணுவத்தினரால் கொல்லப்பட்டமை உக்ரேனிய மக்களைப் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை