Skip to main content

25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலை பாடத்திட்டம் மாற்றி அமைப்பு - அமைச்சர் பொன்முடி

Mar 08, 2022 82 views Posted By : YarlSri TV
Image

25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலை பாடத்திட்டம் மாற்றி அமைப்பு - அமைச்சர் பொன்முடி 

25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.



சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 1978-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது



சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கைக்கு பதிலாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.



போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்ற இந்திய மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அதேசமயம் அந்நாட்டில் உள்ள இந்திய மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக உக்ரைனில் வசித்து வந்த இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். உக்ரைனில் இருந்து நாடு திரும்பியவர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 123 மாணவ மாணவிகள் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். தமிழ்நாடு வந்த மாணவ மாணவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்நிலையில், “உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் ஏற்படுத்தும்” என அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

12 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை