Skip to main content

ரஷ்யாவில் பேஸ்புக் - டுவிட்டருக்கு தடை! - புடின் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

Mar 05, 2022 78 views Posted By : YarlSri TV
Image

ரஷ்யாவில் பேஸ்புக் - டுவிட்டருக்கு தடை! - புடின் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை 

ரஷ்யாவின் ஊடக ஒழுங்குமுறை நிறுவனம் அந்நாட்டில் பேஸ்புக்கிற்கான அணுகலைத் தடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



இந்த நடவடிக்கை ரஷ்ய குடிமக்களுக்கு உக்ரைனில் உள்ள மோதல்கள் பற்றிய தகவல் மற்றும் செய்திகளின் வெளிப்புற ஆதாரங்களை அணுகுவதை மிகவும் கடினமாக்கும் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.



உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக, கடந்த சில நாள்களாக தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைத் ரஷ்யாவில் நிறுத்து வருகின்றன.



போர் குறித்து "போலி செய்திகளை" வெளியிடுபவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன், நாட்டில் பத்திரிகையாளர்கள் மீது ரஷ்யா ஏற்கனவே கடுமையான புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.



இந்நிலையில், ரஷ்யாவில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களின் அணுகலை தடுத்திட அந்நாட்டு அரசு முடிவு செய்திருந்தது. இதன்படி, ரஷ்யாவின் ஊடக ஒழுங்குமுறை நிறுவனம் அந்நாட்டில் பேஸ்புக்கிற்கான அணுகலைத் தடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.      



டுவிட்டருக்கும் தடை...



ரஷ்யாவில் டுவிட்டருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



பேஸ்புக் தடை செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் தற்போது டுவிட்டரும் தடை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

13 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை