Skip to main content

டிக்டாக் பிரபலம் திவ்யா சைபர் க்ரைம் போலீசாரால் கைது!..

Sep 16, 2021 121 views Posted By : YarlSri TV
Image

டிக்டாக் பிரபலம் திவ்யா சைபர் க்ரைம் போலீசாரால் கைது!.. 

தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை கைது செய்த தேனி சைபர் க்ரைம் போலீசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர்.



தேனி அருகே உள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. டிக்டாக் செயலி இருந்த சமயத்தில் வாடிக்கையாக வீடியோக்களை வெளியிட்டு வந்து பிரபலம் அடைந்த இவர், பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். இவரைப் போலவே டிக்டாக்கில் பிரபலம் அடைந்தவர் தான் தஞ்சாவூரைச் சேர்ந்த திவ்யா. டிக்டாக் செயலியை முடக்கிய பின் யூடியூப் சேனல் மூலம் திவ்யா வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். இவர் பதிவு செய்யும் வீடியோக்கள் பெரும்பாலும் ஆபாசமாகவே இருக்கும். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த திவ்யாவிற்கும் சுகந்திக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாகவே மோதல் இருந்து வந்தது. இந்த மோதல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு வரை சென்றது.



கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாகலாபுரத்தைச் சேர்ந்த சுகந்தி, சமூக வலைதளத்தில் திவ்யா என்ற பெண் தன்னையும் தன் குடும்பத்தினரைம் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதாக புகார் அளித்ததன் அடிப்படையில் பழனிச்செட்டிபட்டி காவல் துறையினர் திவ்யா மீது வழக்குப்பதிவு செய்தனர். சுகந்தி கடந்த மாதம் 8 ஆம் தேதி திவ்யா சமூக வலைதளத்தில் தன்னை ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதாக தேனி சைபர் க்ரைம் போலீசாரிடம் மீண்டும் புகார் மனு அளித்தார். அந்த புகார் மனு மீது விசாரணையை துவங்கிய சைபர் க்ரைம் போலீசார் திவ்யாவை பிடிப்பதற்கு ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.



இதனை அறிந்த திவ்யா தேனி போலீசார், தன்னை தேடுவதாக, யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுவிட்டு, ஊர் ஊராக சுற்றிவந்தார். சைபர் க்ரைம் போலீசார் திவ்யாவின் தொலைபேசி எண்ணை டிராக் செய்து, அவர் சென்ற தஞ்சாவூர், சென்னை, வடலூர், பான்டிச்சேரி ஆகிய பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர். இறுதியாக நேற்று இரவு நாகப்பட்டினத்தில் சுற்றித் திரிந்த திவ்யாவை கைது செய்தனர். அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை