Skip to main content

இலங்கை விடயம் தொடர்பில் தீவிரமாக உள்ளோம்; பிரிட்டன்

Feb 04, 2022 70 views Posted By : YarlSri TV
Image

இலங்கை விடயம் தொடர்பில் தீவிரமாக உள்ளோம்; பிரிட்டன் 

இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் பாலியல் வன்முறைகள் குறித்து சர்வதேச உண்மை நீதிக்கான திட்டம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையை தீவிரமாக எடுத்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.



அத்துடன் இலங்கையில் மோசமடைந்து வரும்மனித உரிமைகள் நிலவரம் குறித்து கடும் கரிசனைகளை வெளியிட்டுள்ளதாகவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.



இதனை, நாடாளுமன்ற உறுப்பினர் டோனியா அன்டோனியாசி எழுப்பிய கேள்விக்கு வழங்கியுள்ள எழுத்துமூல பதிலில் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அமன்டா மில்லிங் (Amanda Milling)  தெரிவித்துள்ளார்.



அத்துடன் இலங்கைக்கான சமீபத்தைய விஜயத்தின் போதுஅமைச்சர் தாரிக் அகமட் இலங்கை தலைவர்களுடன் இந்த விவகாரங்கள் குறித்து இலங்கை தலைவர்களுடன் பல முறை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.



இந்த விவகாரங்களின் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் பிரிட்டனிற்கான இலங்கைதூதுவருடனுடஇலங்கை வெளிவிவகார அமைச்சருடனும்பல தடவை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.



இலங்கைக்கு ஜனவரி18 ம் திகதிமுதல் 20 திகதி வரை மேற்கொண்ட விஜயத்தின் போது ஜனாதிபதிவெளிவிவகார அமைச்சர் அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்களை சந்தித்தவேளை மோசமடைந்து வரும் மனித உரிமை குறித்து அவர் கேள்வி எழுப்பியதாக அமன்டா மில்லிங் (Amanda Milling) தெரிவித்துள்ளார்.



ஒக்டோபர் 26ம் திகதிவெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிசினை சந்தித்தவேளை வெளிவிவகார அமைச்சர் இது குறித்து கேள்வி எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.



ஐக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவையினால் ஆணைவழங்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கையில் மனிதஉரிமைகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளிற்கு நாங்கள் தொடர்ந்தும் ஆதரவளிப்போம் என பிரிட்டிஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை