Skip to main content

உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா?

Jan 19, 2022 84 views Posted By : YarlSri TV
Image

உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? 

இன்றைய காலக்கட்டத்தில் உயிரை பறிக்கும்  முக்கிய நோய்களுள் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது.



புற்றுநோய் என்பது உடலில் உள்ள செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் பிரிந்து சுற்றியுள்ள திசுக்களில் பரவும் போது ஏற்படும் ஒரு நோயாகும்.



இந்த புற்றுநோயால் உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்றுநோய் ஒருவருக்கு பல காரணங்களால் வரலாம்.



ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவுகளை உண்பதால் கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.



தற்போது புற்றுநோயை தடுக்க கூடிய ஒரு சில உணவுகள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.



ஆப்பிள் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எனவே ஆப்பிளை அதிகம் சாப்பிட்டு வந்தால், மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம். 



  வேர்க்கடலை எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளன. இவை பல வகையான புற்றநோய்களின் அபாயத்தைக் குறைக்கக்கூடியது. எனவே வேர்க்கடலை எண்ணெயை அன்றாட சமையலில் சேர்ப்பதோடு, முடிந்தால் வேர்க்கடலையை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.



  மாதுளையில் உள்ள கூறுகள் ஈஸ்ட்ரோஜென்களால் ஏற்படும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கின்றது. அதோடு மாதுளை புரோஸ்ரேட் புற்றுநோய் மற்றும் இதய நோயின் அபாயத்தில் இருந்தும் பாதுகாக்கிறது.



கேரட்டில் உள்ள பாலிஅசிட்லின் தான் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும், இதில் உள்ள கரோட்டினாய்டு அமிலம் பெண்களில் மார்பக புற்றுநோய் செல்களைத் தடுக்கிறது.  



 ப்ராக்கோலியில் ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே போன்ற வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் காணப்படுகின்றன. கூடுதலாக இதில் பைட்டோநியூட்ரியண்டுகளும் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. குறிப்பாக, இது மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. 



 நற்பதமான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்ற பெர்ரி பழங்களை அடிக்கடி உணவில் ஒருவர் சேர்த்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். ஆகவே பெர்ரி பழங்களை உங்களின் அன்றாட உணவில் சிறிது சேர்த்து வாருங்கள். 



  டார்க் சாக்லேட்டில் 70 சதவீதம் கொக்கோ உள்ளது. மேலும் அனைத்து வகையான உலர் பழங்கள், ஒமேக-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் போன்றவையும் புற்றுநோயைத் தடுப்பதில் சிறந்தது. 


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை