Skip to main content

எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக விறகு விலையால் மக்கள் திண்டாட்டம்

Jan 11, 2022 90 views Posted By : YarlSri TV
Image

எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக விறகு விலையால் மக்கள் திண்டாட்டம் 

சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை குறித்து விறகு,மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கும் நுவரெலியாவில் பாரிய தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றது என செய்திகள் தெரிவிக்கின்றன.



நுவரெலியா மாவட்டத்தில் தோட்டம், நகரம், கிராமம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு அசௌரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.



குளிர் பிரதேசம் என்பதால், இங்கு வாழும் மக்களுக்குச் சுடுநீர் தேவைப்பாடு அதிகமாகவே உள்ளது. விறகுத் தட்டுப்பாடு காரணமாக சிலர் சுடுதண்ணீரைப் பருகாமையால், தடிமன், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.



நுவரெலியா நகரில் உள்ள ஒரு சில சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களில், எரிவாயு சிலிண்டர்களை மறைத்து  வைத்து கொண்டு, 300 முதல் 400 ரூபாய் வரை அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.



நுவரெலியா நகரில் கடைகளில் மண்ணெண்ணெய் அடுப்புக்கும் பெரும் கிராக்கி ஏற்பட்டு, அடுப்பின் விலை 8,500/= ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இங்கு வாழும் மக்கள், விறகு அடுப்புகள் உபயோகிக்கிற போதிலும் விறகு தேடுவதற்குக் காடுகளுக்குச் செல்ல முடியாது வனப்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .



நுவரெலியாவில் சுடு தண்ணீரின் தேவைக்கு மதிப்பளித்துச் சமையல் எரிவாயு,விறகு, மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடுகள் ஏற்படாது, மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை