Skip to main content

தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு எதிர்ப்பு பாகிஸ்தானுக்கு மரணம்... ஆப்கானில் மக்கள் போராட்டம்!

Sep 08, 2021 113 views Posted By : YarlSri TV
Image

தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு எதிர்ப்பு பாகிஸ்தானுக்கு மரணம்... ஆப்கானில் மக்கள் போராட்டம்! 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், புதிய அரசு அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ஆனால், தலிபான்களுக்கு உலக நாடுகள் ஆதரவு தரவில்லை. பாகிஸ்தான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை காபூலுக்கு வந்த பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ.யின் தலைவர் பைஸ் அமீது, தலிபான்களின் ஆட்சியில் தலைமை பொறுப்பில் அமர கூடிய முல்லா அப்துல் கனி பர்தாரை சந்தித்து பேசினார்.



மேலும், ஆப்கானின் ஒவ்வொரு விஷயத்திலும் அது மூக்கை நுழைத்து வருகிறது. இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானில் போராட்டம் வெடித்துள்ளது. குறிப்பாக, பெண்களும் இதில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு வரும் பெண்கள், வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுவது ஆப்கானில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் பைஸ் அமீது காபூலில் தங்கியுள்ள செரீனா ஓட்டல் முன்பாகவும், பாகிஸ்தான் தூதரகத்தின் முன்பாகவும் பெண்கள் உட்பட ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். அப்போது, ‘ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறு’, ‘பாகிஸ்தானுக்கு மரணம்’, என்பது உட்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். செரீனா ஒட்டலை நோக்கி இவர்கள் சென்றபோது, தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்களை விரட்டினர்.



முல்லா முகமது தலைமையில் இடைக்கால அரசு அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு அமைக்க தலிபான் அமைப்பு நேற்று முடிவு செய்தது. மேலும், இடைக்கால அரசின் பிரதமராக தலிபான் மூத்த தலைவர்களில் ஒருவரான முல்லா முகமது ஹசன் அகுந்த்தை அறிவித்தது. துணை பிரதமர்களாக  முல்லா அப்துஸ் சலாம், முல்லா அப்துல் கனி பரதர் செயல்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த இடைக்கால அரசு எவ்வளவு காலம் பதவியில் இருக்கும் என்பது கூறப்படவில்லை.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை