Skip to main content

வெளியேறிய அமெரிக்கா: தலிபான் தலைவருடன் இந்திய தூதர் அவசர சந்திப்பு!

Sep 01, 2021 170 views Posted By : YarlSri TV
Image

வெளியேறிய அமெரிக்கா: தலிபான் தலைவருடன் இந்திய தூதர் அவசர சந்திப்பு! 

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள்  கைப்பற்றியதும் ஒவ்வொரு நாடுகளும் தங்களுடைய நாட்டு மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதில் கவனம் செலுத்தின. காபூல் விமான நிலையத்தை அமெரிக்க ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு மக்களை வெளியேற்றி வந்தனர்.



நேற்று நள்ளிரவுடன் அமெரிக்கப்படை முற்றிலுமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டது. உடனே, தலிபான் வீரர்கள் காபூல் விமான நிலையத்திற்குள் நுழைந்து, அதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.



இதனால் ஆப்கானிஸ்தானில் இருந்து இன்னும் மீட்கப்படாத நபர்களை எப்படி மீட்பது என்று ஒவ்வொரு நாடுகளும் யோசித்து வருகின்றன. இந்தியாவைச் சேர்ந்தவர்களும் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளனர்.



இந்த நிலையில் கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல், தலிபான்களின் அரசியல் அலுவலக தலைமை அதிகாரி ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டேனெக்ஜாயை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு கத்தாரில் உள்ள தோஹாவில் நடைபெற்றது. அப்போது தீபக் மிட்டல் ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதம் குறித்து கவலைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.



பாதுகாப்பு, ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை விரைவாக மீட்பது குறித்து ஆலோசனையில் முக்கிய இடம் பெற்றுள்ளது. ‘ஆப்கானிஸ்தானில் இருந்து மைனாரிட்டி மக்கள் இந்தியாவுக்கு வரவேற்கப்படுவார்கள். ஆப்கானிஸ்தான் மண் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை, பயங்கரவாதம் ஆகியவற்றிற்கு எந்த அடிப்படையிலும் பயன்படுத்தப்படக் கூடாது’ என்பதை வலியுறுத்தியுள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை