Skip to main content

மத்திய மந்திரி நாராயண் ரானே கைதுக்கு ஜே.பி. நட்டா, பட்னாவிஸ் கண்டனம்!

Aug 25, 2021 155 views Posted By : YarlSri TV
Image

மத்திய மந்திரி நாராயண் ரானே கைதுக்கு ஜே.பி. நட்டா, பட்னாவிஸ் கண்டனம்! 

மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை ஓங்கி அறைந்திருப்பேன் என கூறிய மத்திய மந்திரி நாராயண் ரானே அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார்.



மகாராஷ்டிரா அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தல் கூறியிருப்பதாவது:-



மத்திய மந்திரி நாராயண் ரானேவை மகாராஷ்டிரா அரசு கைது செய்தது அரசியலமைப்பு மதிப்புகளை மீறுவதாகும். இதுபோன்ற நடவடிக்கையால் நாங்கள் பயப்படவோ, அடங்கி போகவோ மாட்டோம்.



ஜன் ஆசீர்வாத் யாத்திரையால் பா.ஜனதாவுக்கு கிடைக்கும் மகத்தான ஆதரவால், இவர்கள் சிரமப்படுகிறார்கள்?. ஜனநாயக முறையிலான எங்களது போராட்டம் நீடிக்கும். எங்களது பயணம் தொடரும்.



இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "நாராயண் ரானேயின் கருத்துக்கு பா.ஜனதா ஆதரவளிக்கவில்லை. ஆனால் அவருக்கு பக்கபலமாக எங்களது கட்சி 100 சதவீதம் உள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக மாநில போலீசார் பயன்படுத்தப்படுகின்றனர். தலீபான் போன்று அராஜகம் செய்யாமல், சட்டம்-ஒழுங்கை பின்பற்றும் அரசாக செயல்பட வேண்டும்" என்றார்.



மராட்டிய பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், "நாராயண் ரானேவின் பேச்சை ஆதரிக்கவில்லை. ஆனால் அவர் பேசியதில் வருத்தம் தெரிவிக்கவும் எதுவுமில்லை. நாராயண் ரானேயை குற்றம்சாட்டுபவர்கள், இதற்கு முன் உத்தவ் தாக்கரே பல முறை இதுபோல பேசியிருக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது" என்றார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை