Skip to main content

மீண்டும் நாடு திரும்புவேன் – ஆப்கன் அதிபர் அறிவிப்பு!...

Aug 19, 2021 153 views Posted By : YarlSri TV
Image

மீண்டும் நாடு திரும்புவேன் – ஆப்கன் அதிபர் அறிவிப்பு!... 

ஆப்கானிஸ்தானின் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். முன்னதாக அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியானது. தற்போது அவர் தஜிகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரப் கனிக்கு தஞ்சம் அளித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.



20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. மற்ற நாட்டவர்களை அந்தந்த நாட்டின் அரசாங்கம் பத்திரமாக மீட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.



இந்நிலையில் ரத்தக்களறியை தடுக்கவே வெளியேறினேன் என்று ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி விளக்கம் அளித்துள்ளார். காபூலில் பேரழிவு நிகழக் கூடாது என்பதால் நாட்டை விட்டு வெளியேறினேன் . நான் காபூலிலேயே இருந்திருந்தால் நிச்சயம் வன்முறை வெடித்திருக்கும். நான் ஹெலிகாப்டரில் பணத்தை எடுத்து சென்றதாககூறுகின்றனர். எனது காலனிகளை அணிய கூட எனக்கு நேரம் இல்லை. நான் எப்படி பெட்டி பெட்டியாக பணத்தை எடுத்து செல்ல முடியும். எனது உயிருக்கு ஆபத்து என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதால் தான் வெளியேறினேன்.மீண்டும் ஆப்கன் திரும்பி நாட்டின் இறையாண்மைக்காக போராடுவேன் என்றார். ஐக்கிய அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி சமூக வலைதளம் வாயிலாக மக்களிடம் பேசினார்.முன்னதாக பேஸ்புக் நிறுவனம் தலிபான்களின் கணக்குகள் முடக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி தலிபான்களின் ஃபேஸ்புக் , வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தலிபான்கள், மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை