Skip to main content

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினாவுக்கு டிஎஸ்பி பதவி - அசாம் அரசு அறிவிப்பு...

Aug 13, 2021 136 views Posted By : YarlSri TV
Image

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினாவுக்கு டிஎஸ்பி பதவி - அசாம் அரசு அறிவிப்பு... 

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவின் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் வெண்கல பதக்கம் வென்றார். இதனால் இவருக்கு பரிசுத்தொகை குவிந்து வருகிறது. 



இந்நிலையில், அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பாராமுகியா என்ற கிராமத்தைச் சேர்ந்த லவ்லினாவிற்கு அம்மாநில முதல் மந்திரி ஹிமந்த விஸ்வ சர்மா ரூ.1 கோடி பரிசுத்தொகையும், மாநில காவல்துறையில் டிஎஸ்பி பதவியையும் வழங்கியுள்ளார். 



மேலும்  அசாம் மாநில முதல் மந்திரி ஒலிம்பிக் வீராங்கனை லவ்லினாவிற்கு அறிவித்துள்ள பரிசுகள் பின்வருமாறு:



அசாமில் முதன் முறையாக ஒலிம்பிக் பதக்கம் வென்று கொடுத்த லவ்லினா 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்வதை கனவாகக் கொண்டுள்ளார். இதனால் அதுவரை இவருக்கு மாதந்தோறும் ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். 



மேலும், கவுகாத்தியில் உள்ள ஒரு சாலைக்கு லவ்லினாவின் பெயர் சூட்டப்படும். இதையடுத்து, லவ்லினா பதக்கம் வெல்ல காரணமாக இருந்த இவரது பயிற்சியாளர்களான பிரஷந்தா தாஸ், பதும் பரௌவா, சந்தியா குருங், ரஃபேல் கமவஸ்கா ஆகியோருக்கு அசாம் சார்பாக ரூ.10 லட்சம் வழங்கி அவர்கள் கௌரவிக்கப்படுவார்கள். லவ்லினா வசிக்கும் கிராமத்தில் குத்துச்சண்டை அகாடமி வசதியோடு விளையாட்டு வளாகம் அமைய உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை