Skip to main content

வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் குறித்து காவல்துறை விசாரணை!

Aug 07, 2021 181 views Posted By : YarlSri TV
Image

வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் குறித்து காவல்துறை விசாரணை! 

கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என காவல்துறை தெரிவித்துள்ளது.



காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.



வெள்ளவத்தை, தெஹிவளை, நுகேகொடை, கல்கிசை மற்றும் மிரிஹானை ஆகிய பகுதிகளில் இந்த குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படவிருப்பதாக போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன.



எவ்வாறாயினும், அவ்வாறு வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.



சம்பவம் தொடர்பில், கல்கிசை காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

24 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை