Skip to main content

விரைவில் உட்கட்சி தேர்தல் – ஓபிஎஸ் -ஈபிஎஸ் இன்று ஆலோசனை!

Jul 22, 2021 158 views Posted By : YarlSri TV
Image

விரைவில் உட்கட்சி தேர்தல் – ஓபிஎஸ் -ஈபிஎஸ் இன்று ஆலோசனை! 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல சர்ச்சைகள் வந்தன. பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டு பிறகு அவரை கட்சியிலிருந்து ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் நீக்கினர். தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியின் செயல்பட்டு வருகின்றனர்.



இந்த சூழலில் அதிமுக உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டு அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்து பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் .ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படாமல் சர்வாதிகார போக்கு நடைபெற்று வருவதாக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி மகாதேவன் விசாரித்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் அதிமுகவின் தேர்தல் டிசம்பருக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அக்கட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.



இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடைபெறவுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை