Skip to main content

ஜெர்மனி, பெல்ஜியத்தில் வெள்ளப்பெருக்கு- உயிரிழப்பு 157 ஆக உயர்வு!

Jul 17, 2021 197 views Posted By : YarlSri TV
Image

ஜெர்மனி, பெல்ஜியத்தில் வெள்ளப்பெருக்கு- உயிரிழப்பு 157 ஆக உயர்வு! 

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இதேபோல் பெல்ஜியத்திலும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. 



வீடுகள் இடிந்து விழுந்ததாலும், வெள்ளத்தில் சிக்கியும் பலர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாசன்பெர்க் அணை உடைந்ததால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 700 பேர் வெளியேற்றப்பட்டனர்.



இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனியில் 133 பேரும், பெல்ஜியத்தில் 24 பேரும் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.



இதேபோல் நெதர்லாந்திலும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், லிம்பர்க் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை