Skip to main content

சென்னையில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்: முக்கிய தகவல் இதோ!

Jul 14, 2021 146 views Posted By : YarlSri TV
Image

சென்னையில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்: முக்கிய தகவல் இதோ! 

சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிவிட்டது. ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருப்பதால் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.



டெங்கு வைரஸ் காய்ச்சலை தடுக்க ஆளில்லா ட்ரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் தங்களது வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தண்ணீர் தேங்கியது கண்டறியப்பட்டால் 100 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.



இந்த நிலையில், சென்னையில் கடந்த 13 நாட்களில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனோ தொற்று குறைந்திருக்கும் சூழலில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் தென்மேற்கு பருவக் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் மாவட்டந்தோறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை