Skip to main content

ஈஸ்டர் தாக்குதல்: அரசாங்கம் மக்களை ஏமாற்ற நினைக்கக்கூடாது – கொழும்பு பேராயர்

Jul 14, 2021 167 views Posted By : YarlSri TV
Image

ஈஸ்டர் தாக்குதல்: அரசாங்கம் மக்களை ஏமாற்ற நினைக்கக்கூடாது – கொழும்பு பேராயர் 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னால் இருக்கும் மர்மங்கள் என்ன என்பதனை ஆராய்ந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். அதைவிடுத்து இந்த விசாரணைகளை மேலோட்டமாக முன்னெடுத்து, ஒருசிலரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இந்த விடயம் முடிந்துவிட்டது எனக் கூறி, விசாரணைகளை மறைக்க முயற்சிக்க வேண்டாம் என்று அரசைக் கேட்டுக்கொள்கின்றோம் என கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.



கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது:-



“ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள ஒரு சில விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் முன்வைத்துள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.



எவ்வாறாயினும் சம்பவத்தின் பின்னால் உள்ள மர்மங்கள் குறித்து ஆராயாமல் வழக்குகளைத் தொடர்வதன் மூலம் எமது மக்களை மகிழ்ச்சியடையச் செய்ய முடியுமென்று அரசோ அல்லது அது சர்ந்த நிறுவனமோ நினைத்தால் அது தம்மைத்தாமே ஏமாற்றுவதாக அமைந்துவிடும்.



உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இது ஆழமான சதித்திட்டம் என்று முன்னாள் சட்டமா அதிபர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தச் சதித்திட்டத்தை அறிந்துகொள்ளும் உரிமை எமக்கு உள்ளது” – என்றார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை