Skip to main content

கத்தோலிக்க சிலைகள் மீதான தாக்குதல் குறித்து விசேட விசாரணை!

Jul 16, 2021 183 views Posted By : YarlSri TV
Image

கத்தோலிக்க சிலைகள் மீதான தாக்குதல் குறித்து விசேட விசாரணை! 

மன்னார் காவற்துறை பிரிவின் மூன்று இடங்களில் உள்ள கத்தோலிக்க சிற்றாலய சிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் இதே போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.



கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் தளங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவரான பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), அம்பாறையிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீகவாபி ரஜ மகா விகாரையின் மீள்கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் பொருட்டு நேற்றைய தினம் (15) விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளரிடம் வருகை தந்திருந்த ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



இந்த விஜயத்தில், ஸ்ரீ சம்போதி விகாரையின் பிரதம விகாராதிபதியும் பௌத்தயா தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் பணிப்பாளருமான வண. பொரலந்த வஜிரஞான தேரர், தீகவாபி விகாரையின் பிரதம விகாராதிபதி வண. மகாஓய சோபித்த தேரர், கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரிவென கல்விக்கான உதவி ஒருங்கிணைப்புப் பணிப்பாளர் வண. கிரிந்திவெல சோமரத்ன தேரர், கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோரும் கலந்து கொண்டனர்.



“இதுவரை கணிசமான நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதை கண்ணூடாக காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்த ஜெனரல் குணரத்ன “அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் இந்த நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய முடியும்” என நம்பிக்கை வெளியிட்டார்.



இந்த திட்டத்திற்கு அவசியமான செங்கற்களின் உற்பத்தி செயல்முறையை விரைவுபடுத்த வேண்டிய அவசியத்தை மேற்கோள் காட்டிய அவர், இந்த திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வின் பின்னரான ஆறு மாத காலப்பகுதியில் தூபியின் 10 அடி உயரம் வரை புனரமைத்துள்ளோம் என்றார்.



பல்வேறு தரப்பட்ட பக்தர்களின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இந்த புண்ணிய கருமத்திற்கு பக்தர்களின் பங்களிப்பினை மேலும் எதிர்பார்ப்பதாகவும் இதற்காக இலங்கை வங்கியில் செயற்படுத்தப்படும் வங்கி கணக்கு மூலம் தங்களது பங்களிப்பினை அளிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.



“இந்த நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறுகிய காலத்தில் 12 முதல் 15 அடி உயரத்தை எட்ட முடியும் என எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்த அவர், தீகவாபியின் முன்னைய மகிமையை 2023 ஆம் ஆண்டளவில் மீண்டும் கொண்டு வரப்படும் என குறிப்பிட்டார்.



திட்டத்தை மேம்படுத்துவது குறித்து விளக்கிய ஜெனரல் குணரத்ன, “மரங்கள் சூழவுள்ள இரம்யமான சூழலைக் கொண்டமைந்த ஒரு முழுமையான யாத்ரீகர்கள் ஓய்வு மண்டபம் (விஷ்ராம ஷாலா) கட்டப்படும்” என குறிப்பிட்டார்.



இந்த விஜயத்தின் மற்றுமொரு அங்கமாக நினைவுச் சின்னங்கள் கொண்ட அறை நிர்மாணம், நிலையான செங்கல் உற்பத்திக்கான இயற்கை வளங்கள் மற்றும் மரங்கள் நடுகை செய்தல் என்பன தொடர்பாக சம்பந்தப்பட்ட திட்ட பங்குதாரர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.



இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களின் செயற்பாடுகளை மேலும் வினைத்திரனாக முன்னெடுக்க பௌத்தயா தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் ஊடாக மூன்று உழவு இயந்திரங்கள் மற்றும் கையுறைகள் என்பன நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.



மேலும், இதன்போது இப்பகுதியில் உள்ள பிரிவென மற்றும் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கைகைளை எளிதாக மேற்கொள்வதற்கு 20 டேப்லெட் கணினிகளும் வழங்கி வைக்கப்பட்டன.



இதேவேளை, ஊடகங்களுக்கு பதிலளித்த அமைச்சர் வீரவன்ச, கனிய வளங்கள் ஊடாக செங்கல் உற்பத்திக்கு உதவுவதற்கான வழி கோரப்படும் என தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை