2வது டி20 போட்டி - இலங்கையை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
Jun 25, 2021 173 views Posted By : YarlSri TV
2வது டி20 போட்டி - இலங்கையை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் டி 20 போட்டியில் வென்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கார்டிப்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. குசால் மெண்டிஸ் 39 ரன்னும், குசால் பெராரா 21 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் மார்க் வுட், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டும், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
சாம் பில்லிங்சும், லிவிங்ஸ்டோனும் தாக்குப்பிடித்து நின்றனர். அப்போது மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்துக்கு 18 ஓவரில் 103 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இறுதியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது. லிவிங்ஸ்டோன் 29 ரன்னுடனும், சாம் கரன் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என டி 20 தொடரை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது லிவிங்ஸ்டோனுக்கு அளிக்கப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago