Skip to main content

ஆன்லைன் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை - மத்திய அரசு எச்சரிக்கை

Jun 23, 2021 156 views Posted By : YarlSri TV
Image

ஆன்லைன் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை - மத்திய அரசு எச்சரிக்கை 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இதில், முக்கியமான திருத்தங்களை சேர்ப்பது தொடர்பாக ஜூலை 6-ந் தேதி வரை பொதுமக்களின் கருத்துகளை மத்திய அரசு கேட்டுள்ளது.



ஆன்லைன் வணிக நிறுவனங்களின் மோசடியான தள்ளுபடி விற்பனைக்கு தடை விதிப்பது, தலைமை குறைதீர்ப்பு அதிகாரியை நியமிப்பது உள்ளிட்ட திருத்தங்கள் சேர்க்கப்பட உள்ளன.



இதனால், ஆன்லைன் வணிக நிறுவனங்கள் ‘பிளாஷ் சேல்’ என்ற பெயரில் நடத்தும் அதிரடி தள்ளுபடி விற்பனைக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகார அமைச்சக கூடுதல் செயலாளர் நித்தி காரே கூறியதாவது



அதிரடி தள்ளுபடி விற்பனையை நாங்கள் எதிர்க்கவில்லை. இத்தகைய போட்டி இருந்தால்தான், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும். எனவே, அதை நாங்கள் தடை செய்யவோ, ஒழுங்குபடுத்தவோ போவதில்லை. அதிரடி தள்ளுபடி விற்பனை குறித்த விவரங்களையும் கேட்க மாட்டோம்.



ஆனால், மோசடியான தள்ளுபடி விற்பனை நடந்தாலோ, பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தாலோ சட்டப்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மோசடியான விற்பனை நடந்தால், புகார் தெரிவிக்கும் வசதி இருக்க வேண்டும் என்பதால்தான் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே, ஆன்லைன் வணிக நிறுவனங்கள் பயப்பட தேவையில்லை.



இவ்வாறு அவர் கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை