Skip to main content

போலி ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பு- கையும் களவுமாக 6 பேர் சிக்கினர்

Jun 19, 2021 152 views Posted By : YarlSri TV
Image

போலி ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பு- கையும் களவுமாக 6 பேர் சிக்கினர் 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து நல்ல பலன் அளிப்பது தெரியவந்ததையடுத்து இந்த மருந்தை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. மருந்துக்கு பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாங்கும் நிலை ஏற்பட்டது. 



இந்த சூழலைப் பயன்படுத்தி, சிலர் ரெம்டெசிவிர் மருந்துகளை போலியாக தயாரித்து மக்களிடம் விற்பனை செய்யத் தொடங்கி உள்ளனர். அவர்களை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர். 



இந்நிலையில் பஞ்சாப் மாநிலம், ரோபார் பகுதியில் போலி ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலி ரெம்டெசிவிர் மருந்து தயாரித்தது கும்பல் சிக்கியது. போலி மருந்து ஆலையின் உரிமையாளர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, போலி மருந்து தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்கள், டிசைன்கள், குப்பிகள் மற்றும் 2 கோடி ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.



இதன்மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான போலி மருந்து வணிகம் தடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை