Skip to main content

குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா 50 கோடி தடுப்பூசி நன்கொடை!

Jun 11, 2021 216 views Posted By : YarlSri TV
Image

குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா 50 கோடி தடுப்பூசி நன்கொடை! 

கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படுகிற குறைந்த வருமானம் கொண்ட 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா 50 கோடி பைசர் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் பணி ஆகஸ்டு மாதம் தொடங்கும். இதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.



அந்த அறிக்கையில், “ஜனாதிபதி ஜோ பைடன் 50 கோடி பைசர், பயோஎன்டெக் தடுப்பூசிகளை வாங்குவது பற்றி அறிவிப்பார். இந்த தடுப்பூசிகளை கோவேக்ஸ் அட்வான்ஸ் சந்தைக்குழுவும், ஆப்பிரிக்க ஒன்றியமும் வரையறை செய்துள்ள குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட 92 நாடுகளுக்கு நன்கொடையாக அளிப்பார்” என கூறப்பட்டுள்ளது.



இவற்றில் 20 கோடி தடுப்பூசிகள் இந்த ஆண்டு இறுதிக்குள்ளும், எஞ்சிய 30 கோடி தடுப்பூசி அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிலும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை