Skip to main content

எக்ஸ் – பிரஸ் பேர்ள்’ கப்பல் இரகசியமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ இலங்கைக் கடற்பரப்பில் நுழையவில்லை என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார். அத்தோடு, மோசமான காலநிலை காரணமாகவே கப்பல் தீப்பிடித்திருக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது- “குறித்த கப்பல் ஒவ்வொரு மாதமும் இலங்கைக்கும் ஏனைய நாடுகளின் துறைமுகங்களுக்கும் செல்லும் கப்பல். தீப்பிடித்த இந்தக் கப்பல் சிங்கப்பூரில் ஆரம்பித்து ஆறு நாடுகளுக்கு பயணிக்கும் கப்பலாகும். மே 17ஆம் திகதி வரவேண்டிய கப்பல் மோசமான காலநிலை காரணமாக இரு நாட்களுக்குப் பின்னர் வந்தது. இதில் 1,466 கொள்கலன்கள் இருந்தன. அதில் 513 கொள்கலன்கள் இலங்கையில் இறக்க வேண்டியவையாகும். ஆகவே, இது ஒரு இரகசியக் கப்பல் என எவரும் கூற முடியாது. அதேநேரம், கப்பல் விபத்துக்குள்ளானதை அறிந்து கொண்டவுடன் இலங்கைக் கடல் எல்லையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடலில் எதுவிதமான இரசாயனங்களும் கலக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். கடலில் கலக்கப்பட்ட கழிவுகளை நாம் முழுமையாக அகற்றும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் எமது கடல் பரப்பை முழுமையாகச் சுத்தப்படுத்தி விடுவோம். அதேபோல் நட்டஈடு எடுக்கப்படும். ஆனால், அது உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியாது. எனினும், இடைக்கால நட்டஈடு ஒன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம்” – என்றார்.

Jun 09, 2021 207 views Posted By : YarlSri TV
Image

ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு  ராணுவத்தினரால் விசேட வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்

நாளைய தினம் ஓய்வூதிய  கொடுப்பனவு பெறுவோர் தமக்குரிய கொடுப்பனவினை வங்கிகளில் பெறவுள்ள   நிலையில் தற்போதுள்ள பயண தடையின் காரணமாக ஓய்வூதியக் கொடுப்பனவை பெறுவோர் தமது கொடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து 

ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும்  ராணுவத்தினரால் வாகன  ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்

எனவே யாழ் மாவட்டத்தில் ஓய்வூதியம்  பெறுவோரில் பயணித்த இடைவளையில் அவர்களுக்கு வாகன வசதி தேவைப்படுவோர் தமது கிராம சேவகருடன்  தொடர்புகொண்டு பிரதேச செயலர் ஊடாக தமக்கென ஒதுக்கப்பட்ட வாகனங்களில் பயணித்து ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

  தற்போது உள்ள இடர் நிலையை கருத்தில்கொண்டு  முதியோர் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் முகமாகவும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாகவும்  ராணுவத்தினரால்  இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை