Skip to main content

கூடுதல் விவரம் கேட்டு சீனாவை கட்டாயப்படுத்த முடியாது - உலக சுகாதார நிறுவனம்

Jun 08, 2021 146 views Posted By : YarlSri TV
Image

கூடுதல் விவரம் கேட்டு சீனாவை கட்டாயப்படுத்த முடியாது - உலக சுகாதார நிறுவனம் 

சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தாக்கம் இன்னும் முடியவில்லை.



வுகான் நகரில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து கொரோனா பரவியதாகக் கருதப்படுகிறது. அதே சமயம், கொரோனா வைரசை சீனா தனது வுகான் பரிசோதனைக் கூடத்தில் செயற்கையாக உருவாக்கியபோது அங்கிருந்து கசிந்திருக்கலாம் என்று ஒருசாரார் கூறுகின்றனர்.



எனவே, கொரோனா எப்படி தோன்றியது என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இக்குழுவினர் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சீனாவுக்குச் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். சீன விஞ்ஞானிகளுடன் சேர்ந்து விசாரணையில் இறங்கினர். உணவு சந்தை, ஆய்வுக்கூடம் போன்ற இடங்களுக்கும் நேரில் சென்றனர். இதுதொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.



இந்நிலையில், கொரோனா தோற்றம் குறித்த கூடுதல் தரவுகளை வெளியிட சீனாவைக் கட்டாயப்படுத்த முடியாது என உலக சுகாதார அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



மேலும், கொரோனா வைரஸ் "அடுத்த நிலைக்கு" எங்கு தோன்றியது என்பதை அறிந்து கொள்ள தேவையான ஆய்வுகளை  உலக சுகாதார அமைப்பு முன்மொழிகிறது என தெரிவித்தார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை