Skip to main content

ஆட்டோவில் ரூ.3 ஆயிரம் கேட்டதால் 20 கிமீ குழந்தையுடன் நடந்து சென்ற தம்பதியினர்!

May 26, 2021 165 views Posted By : YarlSri TV
Image

ஆட்டோவில் ரூ.3 ஆயிரம் கேட்டதால் 20 கிமீ குழந்தையுடன் நடந்து சென்ற தம்பதியினர்! 

முழு ஊரடங்கு காரணமாக ஆட்டோ, கார் உள்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பெங்களூரில் இருந்து ஒரு தம்பதியினர் காட்பாடிக்கு ரெயிலில் வந்தனர்.



வேலூர் அடுத்த கணியம்பாடிக்கு ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தவர்கள் காட்பாடியிலிருந்து கணியம்பாடி செல்ல ஆட்டோ இருக்கிறதா? என்று பார்த்தனர். அப்போது நோயாளிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வாங்கியிருந்த ஒரு சில ஆட்டோக்கள் ஓடின.

 



ஒரு ஆட்டோ டிரைவரிடம் கணியம்பாடி செல்ல வேண்டும் என்று கூறி கட்டணம் கேட்டனர். அவர் ரூ.3 ஆயிரம் கேட்டுள்ளார்.



காட்பாடியில் இருந்து கணியம்பாடி 20 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இதற்கு ரூ.3 ஆயிரமா? என்று அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.



ஊரடங்கு நேரத்தில் எந்தவித போக்குவரத்தும் இல்லையே என வருந்தினர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த பைகள், குழந்தைகளுடன் 20 கி.மீ தூரம் நடந்தே கணியம்பாடிக்கு சென்றனர்.



ரெயில்கள் ஓடுவதால் ரெயில் நிலையத்தில் கட்டண விவரங்களுடன் பதிவு செய்த ஆட்டோக்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை