Skip to main content

விவேக்கை கௌரவிக்க மத்திய அரசு முடிவு!

Apr 28, 2021 170 views Posted By : YarlSri TV
Image

விவேக்கை கௌரவிக்க மத்திய அரசு முடிவு! 

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 



ஒரு குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் நடிகர் விவேக் திகழ்ந்தார். இயற்கையை நேசித்த, இயற்கையின் பாதுகாவலராக விளங்கிய நடிகர் விவேக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மத்திய அரசு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பிரதமர் மோடியிடம் ஆலோசனை செய்ததாகத் தகவல்கள் வெளிவருகின்றன.



அதாவது விவேக் படம் போட்ட தபால் தலை (Postage Stamp) விரைவில் வெளியிடப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. அநேகமாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் தபால் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. 


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை