Skip to main content

ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது – ஜனாதிபதி

May 03, 2021 171 views Posted By : YarlSri TV
Image

ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது – ஜனாதிபதி 

உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது மட்டுமே ஊடகங்களின் பணி அல்ல. உண்மையற்ற செய்திகள் மக்களுக்குள் பரவி குழப்ப நிலைகளை ஏற்படுத்துவதையும் ஊடகங்களே பொறுப்புடன் தடுக்க வேண்டும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அனைத்துலக ஊடக சுதந்திர நாளான இன்றைய தினம் தெரிவித்துள்ளார்.



இன்று நாடு சந்தித்து நிற்கும் பெரும் சுகாதார நெருக்கடியான ஒரு காலகட்டத்தில், அவ்வாறு செயற்படுவதே ஊடகங்களின் பெரும் பொறுப்பாகவும் இருக்க முடியும்.



நிறைவுகள் தொடர்பாகப் பேசுவதைத் தவிர்த்து, குறைகளை மட்டுமே கேள்விக்கு உட்படுத்தி, ஒரு நாட்டையும் அதன் மக்களையும் திறம்பட நிர்வகித்துச் செல்வதில் ஓர் அரசாங்கம் சந்திக்கும் சவால்களை விமர்சிப்பது அல்லாமல், மக்களை நல்வழிப்படுத்திச் செல்வதில் அரசாங்கத்திற்கு ஆக்கபூர்வமான உறுதுணையாகவும் ஊடகங்களே திகழ வேண்டும்.



அவையே, ஊடக சுதந்திரம் என்பதன் உள்ளார்ந்த அர்த்தம் ஆகும்.



எமது நாட்டில் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் எமது அரசாங்கம் உறுதிப்பாட்டோடு உள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை