Skip to main content

ஊரடங்கு அறிவிப்பை தொடர்ந்து டெல்லி மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் கூட்டம்!

Apr 20, 2021 181 views Posted By : YarlSri TV
Image

ஊரடங்கு அறிவிப்பை தொடர்ந்து டெல்லி மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் கூட்டம்! 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். அடுத்த சில நிமிடங்களில், டெல்லியில் உள்ள மதுக்கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது.



கடைகளுக்கு முன்பு நீண்ட வரிசை காணப்பட்டது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் மணிக்கணக்கில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கினர்.



ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு எண்ணற்ற பாட்டில்களை வாங்கினர். தெற்கு டெல்லியில் ஒரு மதுக்கடையில் நின்றிருந்த ரவீந்தர் சக்சேனா என்பவர் 8 பாட்டில்கள் வாங்கப்போவதாக கூறினார்.



வரிசையில் காத்திருந்தபோது சிலர் வரிசையை மீறி முன்னால் செல்ல முயன்றதால் வாக்குவாதமும் ஏற்பட்டது. 6 நாட்களுக்கு ஊரடங்கு என்று அறிவித்தாலும், அது நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால், மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்வது நல்லது என்று மது பிரியர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.



கடந்த ஆண்டு ஊரடங்கின்போது, கள்ளச்சந்தையில் இருமடங்கு விலை கொடுத்து மது வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சிலர் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.



இதற்கிடையே, மதுபான நிறுவனங்களின் சங்கம், மராட்டியத்தை போல் டெல்லியிலும் மதுவை வீடுகளுக்கு நேரில் சென்று வினியோகிக்குமாறு வலியுறுத்தி உள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை