Skip to main content

இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 9 கோடியை கடந்தது!

Apr 09, 2021 192 views Posted By : YarlSri TV
Image

இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 9 கோடியை கடந்தது! 

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அன்று முதலே மிகவும் வேகமாக நடந்து வரும் இந்த பணிகள், தற்போது கொரோனாவின் 2-வது அலை தாக்கி வரும் சூழலில் மேலும் வேகமெடுத்துள்ளது.



நாள்தோறும் லட்சக்கணக்கான தடுப்பூசி டோஸ்கள் பயனாளர்களுக்கு போடப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவில் போடப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை நேற்று 9 கோடியை கடந்து விட்டது.



நேற்று காலை 7 மணி நிலவரப்படி மொத்தம் 9 கோடியே 1 லட்சத்து 98 ஆயிரத்து 673 டோஸ்கள் போடப்பட்டு இருந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.



இதில் சுகாதார பணியாளர்கள் 89,68,151 (முதல் டோஸ்), 54,18,084 (2-வது டோஸ்), முன்கள பணியாளர்கள் 97,65,538 (முதல் டோஸ்), 44,11,609 (2-வது டோஸ்), 60 வயதுக்கு மேற்பட்டோர் 3,63,32,851 (முதல் டோஸ்), 11,39,291 (2-வது டோஸ்) என லட்சக்கணக்கானோர் தடுப்பூசி போட்டுள்ளனர்.



இதைப்போல 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2,36,94,487 (முதல் டோஸ்), 4,66,662 (2-வது டோஸ்) பலருக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதுவரை போடப்பட்ட டோஸ்களில் 60 சதவீதம் 8 மாநிலங்களில் போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை