Skip to main content

ஏப்ரல் 19-க்குள் 90 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - ஜனாதிபதி ஜோ பைடன் உறுதி

Mar 31, 2021 190 views Posted By : YarlSri TV
Image

ஏப்ரல் 19-க்குள் 90 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - ஜனாதிபதி ஜோ பைடன் உறுதி 

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அதே வேளையில் அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது.‌ ஜனாதிபதி ஜோ பைடன் தனது பதவி காலத்தின் முதல் 100 நாட்களுக்குள் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து இருந்த நிலையில் 60 நாட்களிலேயே அது முடிந்துவிட்டது‌.



இந்த நிலையில் வருகிற 19-ந் தேதிக்குள் அமெரிக்காவில் உள்ள வயது வந்தோரில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். எஞ்சிய 10 சதவீதம் பேருக்கு மே 1-ந் தேதிக்கு முன்னதாக தடுப்பூசி போடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.‌



இதுகுறித்து அவர் கூறுகையில், “இன்று நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளின் காரணமாக 90 சதவீத அமெரிக்கர்கள் ஏப்ரல் 19-ந் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை பெறும் தகுதி பெறுகிறார்கள். ஏனெனில் நம்மிடம் போதுமான தடுப்பூசிகள் உள்ளன. நமது இந்த முன்னேற்றம் அமெரிக்கர்களாக நாம் ஒன்றாக செயல்படும் போது நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கு ஒரு குறிப்பிடத்தக்க சான்றாகும்.‌ ஆனால் நான் எப்போதும் கூறுவதைப் போல் எல்லோரும் தங்கள் பங்கை செய்ய வேண்டும் நாம் இன்னும் இந்த கொடிய வைரஸ் உடனான போரில் இருக்கிறோம். நாம் நமது பாதுகாப்புகளை மேம்படுத்துகிறோம். ஆனால் போரில் வெற்றி பெறவில்லை” என கூறினார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை