Skip to main content

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 13 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது!

Apr 05, 2021 176 views Posted By : YarlSri TV
Image

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 13 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது! 

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 13 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 28 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.



தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,672கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 3ஆயிரத்து 479ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 23,777 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2,196பேர் ஆண்கள், 1,476 பெண்கள், தமிழகத்தில் 260 பரிசோதனை மையங்கள் உள்ளன.



இன்று 11 பேர் உயிரிழந்துள்ளார். 5 பேர் தனியார் மருத்துவமனையிலும், 6 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,789 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,842பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 66ஆயிரத்து 913ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை