Skip to main content

வீட்டுக்கு அழைத்து ஆலோசனை: கொரோனா பாதிப்புடன் கூட்டம் நடத்திய இம்ரான்!

Mar 27, 2021 164 views Posted By : YarlSri TV
Image

வீட்டுக்கு அழைத்து ஆலோசனை: கொரோனா பாதிப்புடன் கூட்டம் நடத்திய இம்ரான்! 

ஏவுகணை சோதனை பாகிஸ்தான் நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘ஷாகின்-1ஏ’ ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி சோதனை செய்தது. இது, அணு ஆயுதங்களை 900 கிமீ சுமந்து சென்று தாக்கும். கடந்த மாதமும் இதே போன்ற அணு ஏவுகணையை பாகிஸ்தான் சோதனை செய்தது.



இஸ்லாமாபாத்: கொரோனா பாதித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியது சர்ச்சையாகி உள்ளது. சீனாவின் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் (68), அவரது மனைவி பஷ்ரா பிபீக்கும் கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று உறுதியானது. இதனால், இருவரும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதித்த 4 நாளில் இம்ரான் கான் தனது வீட்டில் அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார். இந்த கூட்டத்தில் இம்ரானிடம் இருந்து சற்று விலகி அனைவரும் மாஸ்க் அணிந்தபடி அமர்ந்துள்ளனர்.



இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாகி உள்ளது. நாட்டின் பிரதமரே கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறிலாமா?, கூட்டம் நடத்த வேண்டிய அவசியமிருந்தால், வீடியோ கான்பரன்சிங்கில் நடத்த வேண்டியது தானே என பலரும் பலவாறு விமர்சித்துள்ளனர். கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக பிரதமர் இம்ரான் மற்றும் கூட்டத்தில் பங்கேற்ற அனைவர் மீதும் போலீசார் வழக்கு பதிய வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர்கள் கொதித்துள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை