Skip to main content

தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்ய தடை இல்லை - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

Mar 12, 2021 231 views Posted By : YarlSri TV
Image

தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்ய தடை இல்லை - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு 

கொரோனா தொற்று நோயில் இருந்து உலகம் விடுபடுவதற்காக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளன.

 



இதில் பெரும்பாலான மருந்துகள் கொரோனாவை தடுக்க பெருமளவில் உதவியாக உள்ளன என்றாலும், ஒருசில மருந்துகள் பக்கவிளைவு ஏற்படுத்தும். பாதிப்பு உள்ளது என்று கூறப்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது.



இந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வது இலவசம் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.



பிரச்சினை உள்ளதாக கூறப்படும் கொரோனா மருந்தை விற்பது இல்லை. எனவே வெளிநாடுகளுக்கு கொரோனா மருந்தை விற்பனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.



அமெரிக்காவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் பெருமளவில் உதவி செய்கின்றன. இதுபோல் உலக அளவிலும் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயல்பட முடியும்.



இதற்கு அமெரிக்காவில் பெருமளவு தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. தடுப்பூசி வழங்குவதில் எந்த ஒரு நிறுவனமும் உலகம் முழுவதும் பணியாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.



இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகளை உலகம்முழுவதும் அனுப்பலாம். இந்த மருந்துகளின் ஏற்றுமதிக்கு தடை இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. கொரோனா தடுப்பு மருந்துகளை உலகம் முழுவதும் எந்த ஒரு நாட்டுக்கும் அனுப்பலாம். வினியோகம் செய்யலாம். ஏற்றுமதிக்கு எந்த தடையும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை