Skip to main content

ஈராக்கிற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தில் பாப்பரசர்!

Mar 06, 2021 255 views Posted By : YarlSri TV
Image

ஈராக்கிற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தில் பாப்பரசர்!  

பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் ஈராக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.



பாப்பரசர் ஒருவர் ஈராக் செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 75 ஊடகவியலாளர்களுடன் பாப்பரசர் நேற்று முன்தினம் பிற்பகல் 2.00 மணியளவில் தலைநகர் பக்தாத்தைச் சென்றடைந்தார். நான்காயிரம்; வருடங்களைக் கொண்ட ஈராக்கின் கிறிஸ்தவ வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த விஜயமாக இதனைக் கருதமுடியும் என்று அல்-ஜசீரா ஊடக வலையமைப்பு குறிப்பிட்டுள்ளது.



ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி, பாப்பரசரை வரவேற்றார். பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாருக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.



ஈராக்கின் வடபகுதி பிராந்தியமான குர்டிஷ் பகுதியின் தலைநகராக கருதப்படும் இர்பில் நகருக்கும் அவர் விஜயம் செய்துள்ளார்.. ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் இர்பில் நகரில் தங்கியிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.



ஈராக்கின் சனத்தொகையில் 70 சதவீதமாகவுள்ள ஷியா முஸ்லிம்களின் தலைவர் ஆயத்துல்லா அலி சிஸ்தானியையும் அவர் நஜப் நகரில் சந்திக்கவுள்ளார்.



சிறுபான்மை சுன்னி முஸ்லிம்களின் தலைவர்களும் யதீசி இனத்தவரகளின் முக்கியஸ்தர்களும் இதன்போது பாப்பரசரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை