Skip to main content

அமெரிக்காவில் 8.7 கோடி கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

Mar 07, 2021 216 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்காவில் 8.7 கோடி கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்! 

அமெரிக்காவில் இதுவரை 8.7 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது



உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. தற்போது ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் ஜோ பைடன் அரசு, கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.



அமெரிக்காவில் மாடர்னா மற்றும் பைசர்/பையோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 8,79,12,323 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.



கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தகவலின்படி மொத்தம் 8,50,08,094 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நாட்டின் அனைத்து தடுப்பூசி செலுத்தும் மையங்களிலும் தொடர்ச்சியாக தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டு அதிக அளவிலான மக்களுக்கு மருத்தை கொண்டு சேர்க்க முயன்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.



தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை 5,73,58,849 பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டிருப்பதாகவும், 2,97,76,160 பேருக்கு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை