Skip to main content

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு இம்முறை பல நாடுகள் ஆதரவு!

Feb 18, 2021 187 views Posted By : YarlSri TV
Image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு இம்முறை பல நாடுகள் ஆதரவு! 

ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகியதால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு இம்முறை பல நாடுகள் ஆதரவு வழங்கக்கூடும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.



ஜெனிவா தொடர் மற்றும் புதிய அரசமைப்பு ஆகியன தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறினார்.



டந்த ஆட்சியின்போது அரசமைப்பு ஊடாக நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு முயற்சி எடுத்தபோது அதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம். ஒற்றையாட்சி மற்றும் ஒருமித்த நாடு ஆகிய இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை பிள்ளைகளுக்கு எடுத்துரைக்கவும். அவ்வாறு இல்லையேல் அது பிரிவினைவாதிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விடும்.



ஒற்றையாட்சி என்பது நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் ஒரு சட்டம் அமுலில் இருப்பது. இங்கு 18 வயதில் திருமணம் முடிக்கக் கூடியதாக இருந்தால் அதேநிலைதான் யாழ்ப்பாணத்தில் இருக்க வேண்டும். அங்கு 15 வயதில் திருமணம் முடிக்க முடியாது. ஆனால் ஒருமித்த நாடெனில் 9 மாகாணங்களில் பல சட்

டங்கள் இருக்கும். அதுவே சமஷ்டிக்கு வழிவகுக்கும்.



இந்த நாட்டைப் பிரித்து வடக்கில் ஈழம் உருவானால் எம்மால் சாசனத்தை பாதுகாக்க முடியாமல் போகும். எனவேதான் ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.



ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய தால் எந்தவொரு நாடும் எமக்கு ஆதரவு வழங்கவில்லை. ஆனால், இணை அனுசரணையில் இருந்து நாம் விலகியுள்ளதால் 47 நாடுகளில் பல நாடுகள் எமக்கு இம்முறை ஆதரவளிக்கக் கூடும் என்றார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை