Skip to main content

தடுப்பூசிகளை செலுத்துவதற்காக திட்டங்களை வெளியிட அதிகாரிகள் தயாராக இருக்கும் நிலையில் கடுமையான விதிமுறைகளைதளர்த்தியுள்ளது-தென் கொரியா!

Feb 15, 2021 209 views Posted By : YarlSri TV
Image

தடுப்பூசிகளை செலுத்துவதற்காக திட்டங்களை வெளியிட அதிகாரிகள் தயாராக இருக்கும் நிலையில் கடுமையான விதிமுறைகளைதளர்த்தியுள்ளது-தென் கொரியா! 

தடுப்பூசிகளை செலுத்துவதற்காக திட்டங்களை வெளியிட அதிகாரிகள் தயாராக இருக்கும் நிலையில் வணிக நிறுவனங்களுக்கு அமுல்படுத்தப்பட்டிருந்த சில கடுமையான சமூக விலகல் விதிமுறைகளை தென் கொரியா தளர்த்தியுள்ளது.



இருப்பினும் 4 பேருக்கு மேல் ஒன்று கூடுவதற்கு கட்டுப்பாடுகளை தென் கொரியா அறிவித்துள்ளது.



பெப்ரவரி 26 முதல் தடுப்பூசி திட்டத்தை தொடங்க தென் கொரியா திட்டமிட்டுள்ளது, அதன் விவரங்கள் அந்நாட்டு கொரோனா தடுப்பு நிறுவனத்தின் தலைவரால் அறிவிக்கப்படவுள்ளது.



எவ்வாறாயினும், சியோல் மற்றும் அண்டை பகுதிகளில் தொற்று கொத்துகள் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அப்பகுதிகளுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்திருந்தது.



இன்று திங்கட்கிழமை முதல் சியோல் பகுதியில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக உணவகங்கள் மற்றும் கபேக்கள் ஆகியவற்றினை மூடுவதற்கான நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.



 மதுபான நிலையங்கள் மற்றும் இரவு விடுதிகள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை திரையரங்குகள், இணைய சேவை நிலையங்கள், பூங்காக்கள், பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.



தென் கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மொத்தம் 83 ஆயிரத்து 869 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 1,527 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை