Skip to main content

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன!

Feb 24, 2021 259 views Posted By : YarlSri TV
Image

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன! 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.



பிரதமர் இம்ரான் கான் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பைத் தொடர்ந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.



பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரின் முன்னிலையில் இரு நாட்டு பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.



இரு நாடுகளுக்கும் இடையில் பின்வரும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன,



1. பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு மற்றும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கு இடையிலான சுற்றுலா ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.



2. இலங்கை சனநாயகக் சோசலிசக் குடியரசின் முதலீட்டு சபைக்கும் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் முதலீட்டுச் சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.



3. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி.ஐ), மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் கராச்சி பல்கலைக்கழகம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.



4. கொழும்பு தொழில்துறைத் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத்தின் COMSATS பல்கலைக்கழகத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம்.



5. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாகூர் பொருளாதாரக் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பன கைச்சாத்திடப்பட்டுள்ளன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை