Skip to main content

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு : 8 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு!

Feb 08, 2021 180 views Posted By : YarlSri TV
Image

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு : 8 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு! 

உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்குண்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், 8 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.



உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறைகள் உடைந்து திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டது. அலக்நந்தா மற்றும் தாவ்லி கங்கை ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ரிஷி கங்கை அணை உடைந்து, கரையோரம் உள்ள கிராமங்களிலும் வெள்ளம் பாய்ந்தது.



நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 600 இராணுவ வீரர்கள், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், விமானப் படையின் மூன்று ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளுக்காக களமிறக்கப்பட்டுள்ளன.



‘நிலைமையை மதிப்பிடுவதற்கு ஒரு குழு சம்பவ இடத்திலேயே உள்ளது. நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.’ என இந்தோ திபெத் எல்லை படையின் செய்தித் தொடர்பாளர் விவேக் பாண்டே கூறினார்.



இரண்டு மருத்துவ குழுக்கள் இந்த நடவடிக்கைகளில் சேர்ந்துள்ளன. ஒரு பொறியியல் பணிக்குழு ரிங்கி கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தொடர்ந்து அதிகாரிகளுடன் பேசி நிலைமை குறித்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை