Skip to main content

சிரேஷ்ட சட்டத்தரணி தாஹா செய்னுதீன் காலமானார்

Feb 06, 2021 217 views Posted By : YarlSri TV
Image

சிரேஷ்ட சட்டத்தரணி தாஹா செய்னுதீன் காலமானார் 

அக்கரைப்பற்றில் பிறந்து கல்முனையை வதிவிடமாகவும் கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி தாஹா செய்னுதீன் நேற்று (05) மாலை கொழும்பில் காலமானார்.



இவரது ஜனாஸா நல்லடக்கம் நேற்று (05) கொழும்பு 07 ஜாவத்தை மையவாடியில் இடம்பெற்றது.



அக்கரைப்பற்றில் 1940ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04ஆம் திகதி பிறந்த அவர். அக்கரைப்பற்று மெதடிஸ்ட் மிசன் மற்றும் ரோமன் கத்தோலிக்க கல்லூரி, மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லுாரி ஆகியவற்றில் தனது ஆரம்பக் கல்வியை தொடர்ந்தார்.



1959ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லுாரியில் நுழைந்த அவர், 1965இல் உயர் நீதிமன்ற சட்டத்தரணியானார். 1974இல் பதில் நீதிபதியானார். 1975ஆம் ஆண்டு முதல் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில், கிழக்கு மாகாண குடியியல் வழக்குகளில் ஆஜராகி வந்தார்.



1984/85 காலப் பகுதியில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக தெரிவான இவருக்கு, அவரது சேவையை பாராட்டி கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தினால் 2015இல் கௌரவிக்கப்பட்டார்.



சுமார் 56 வருட காலம் கிழக்கின் அனைத்து நீதிமன்றுகளிலும், குடியியல் வழக்குகளில் ஆஜராகியிருந்தார்.



மூன்று பிள்ளைகளின் தந்தையான இவருக்கு மூன்று சகோதர, சகோதரிகள் உள்ளனர். இவரின் சகோதர்களில் ஒருவர் அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலய முன்னாள் அதிபர் ஹாறூன் என்பதோடு, மர்ஹூம் இக்பால் ஆசிரியர், மர்ஹூம் றக்கீபா ஆசிரியை ஆகியோர் இவரது ஏனைய சகோதர சகோதிகளாவர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை