Skip to main content

அமெரிக்காவின் 71ஆவது வெளிவிவகார அமைச்சராக ஆன்டனி பிளிங்கன் பதவியேற்பு!

Jan 28, 2021 234 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்காவின் 71ஆவது வெளிவிவகார அமைச்சராக ஆன்டனி பிளிங்கன் பதவியேற்பு! 

அமெரிக்காவின் 71ஆவது வெளிவிவகார அமைச்சராக ஆன்டனி பிளிங்கன் பதவியேற்றுக் கொண்டார்.



58 வயதாகும் அவர், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக் காலத்தின்போது வெளிவிவகார இணையமைச்சராகவும் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.



அவரது நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, அவர் வெளிவிவகார அமைச்சராகப் பதவிப் பிராணம் செய்துகொண்டார்.



இதுதொடர்பாக செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், அவரது நியமனத்துக்கு ஆதரவாக 78 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் பதிவாகின.



ஜனாதிபதி ஜோ பைடனின் நீண்ட கால உதவியாளரான ஆன்டனி பிளிங்கன், ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கையால் பிற நாடுகளுடனான உறவில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பைடனின் திட்டத்தை நிறைவேற்ற உதவுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதேவேளை அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதான ஜனத் யெல்லன் என்ற பெண் பதவியேற்றுள்ளார். இதன்மூலம் அமெரிக்காவின் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள, முதல் பெண் என்ற சாதனையையும் இவர் படைத்து உள்ளார்.



முன்னதாக இவரை தேர்வு செய்வதற்கு செனட் சபையில் நடந்த வாக்கெடுப்பில், 84 உறுப்பினர்கள் யெல்லனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.



அமெரிக்க ஜனாதிபதி பைடன், பொருளாதார ஊக்குவிப்பு தொகுப்பை அறிவித்துள்ள நிலையில், நிதி அமைச்சராக இவர் பதவியேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை