Skip to main content

கொவிட்-19 நோயாளிகள் குணமான பின் 10 நாட்களில் விடுவிக்கப்படுவர்; சுற்றறிக்கை வெளியீடு

Jan 27, 2021 179 views Posted By : YarlSri TV
Image

கொவிட்-19 நோயாளிகள் குணமான பின் 10 நாட்களில் விடுவிக்கப்படுவர்; சுற்றறிக்கை வெளியீடு 

கொவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ மேற்பார்வைக் காலத்தை 14 நாட்களில் இருந்து 10 நாட்களாகக் குறைத்து புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.



அதன்படி, எந்த அறிகுறிகளையும் காட்டாதவர்கள் 10 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர்.



மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களின் திறன் பற்றாக்குறையே இதற்குக் காரணம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (ஜி.எம்.ஓ.ஏ) செயலாளர் ஜயந்த பண்டார தெரிவித்தார்.



எவ்வாறாயினும், கொரோனா தொற்றுக்காளானவரை குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு மருத்துவ மேற்பார்வையில் வைத்திருக்க வேண்டுமென்ற உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும், இலங்கையில் சுகாதார அதிகாரிகளின் முறையான திட்டம் இல்லாததால், இந்த 10 நாள் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் வைரஸ் பரவும் அபாயம் சமூகத்தில் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை