Skip to main content

இலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் காட்டமான அறிக்கை – அரசாங்கத்தின் பதில் இன்று!

Jan 26, 2021 232 views Posted By : YarlSri TV
Image

இலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் காட்டமான அறிக்கை – அரசாங்கத்தின் பதில் இன்று! 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கான பதிலை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.



இந்த விடயம் குறித்து தேசிய தமிழ் ஊடகமொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அந்த அமைச்சின் செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.



மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே இதன்போது குறிப்பிட்டுள்ளார்.



அந்த அறிக்கையில் காணப்படும் தரவுகள், குறைபாடுகள், பிழைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தற்போது தனித்தனியாக ஆராயப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



மிக ஆழமாக ஆராய்ந்ததன் பின்னர் அந்த அறிக்கைக்கான பதிலை இன்று மாலை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும்  ஜயனாத் கொலம்பகே கூறியுள்ளார்.



இலங்கை அரசினால் சமர்ப்பிக்கப்படும் பதில் அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் ஏற்றுக்கொள்வார் என தாம் நம்புவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.



மேலும் அதனை பேரவை கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பார் எனவும் வௌிவிவகார அமைச்சின் செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.



46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையில், இலங்கை குறித்த விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பதன் மூலம், உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் விசாரணைகள் மற்றும் வழக்குகளை நிறுவுதல் மற்றும் சர்வதேச குற்றங்களில் சிக்கியுள்ள இலங்கை அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தல் உள்ளிட்ட காட்டமான தீர்மானங்கள் மற்றும் முடிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை