Skip to main content

நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த!

Jan 25, 2021 213 views Posted By : YarlSri TV
Image

நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த! 

நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



ஒரு நாடு, ஒரு சட்டத்திற்கான தேசிய நலனைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் முன்னணியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சட்ட தாமதங்களைத் தவிர்ப்பதற்கும், பிரச்சினைகளை திறம்பட தீர்ப்பதற்கும் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.



மேலும் வரலாற்றில் ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வந்தபோதும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க பணியாற்றியதாகவும் தனிப்பட்ட குறுக்கீடு மூலம் ஒருபோதும் சட்டத்தை வளைக்க முயற்சிக்கவில்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.



நாட்டு மக்கள் இன்னும் காலாவதியான சட்டங்கள், நடைமுறைகள் மற்றும் கட்டளைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அழுத்தத்திலிருந்து மக்களை விடுவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் பிரதமர் தெரிவித்தார்.



மேலும், வழக்கு விசாரணைகளின் தாமதம் மக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது என தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்ப்பு கிடைப்பதற்கு முன்னதாகவே இறக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டார்.



இதேவேளை சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும், பிரஜைகள் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும் எப்போதும் விரும்புவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை