Skip to main content

தனியார்மயமாகும் சேலம் உருக்காலை... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்

Jan 23, 2021 241 views Posted By : YarlSri TV
Image

தனியார்மயமாகும் சேலம் உருக்காலை... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள் 

சேலம் உருக்காலை நிர்வாகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து உருக்காலை INTUC தொழிற்சங்க ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை மத்திய அரசு தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த தனியார் மயமாக்கும் முடிவை கண்டித்து சேலம் உருக்காலை ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் இன்று உருக்காலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து சேலம் INTUC சார்பில் 100 க்கும் மேற்பட்ட உருக்காலை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



உருக்காலை வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உருக்காலையை தனியார் மயமாக்குவதை கை விட வேண்டும், செயில் நிர்வாகத்தின் பங்கு விற்பனையை கைவிட வேண்டும், ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், ஊழியர்கள் ஆள் பற்றாக்குறையை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசையும், செயில் நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.



ஆர்ப்பாட்டம் குறித்து ஊழியர்கள் கூறும் போது உருக்காலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அடுத்த வாரத்தில் உருக்காலையை பார்வையிட தனியார் நிறுவனங்கள் வர உள்ளதாக தகவல் வந்துள்ளது. அவ்வாறு வரும் பட்சத்தில் அவர்களை பாரவியிட ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை