Skip to main content

வேளாண் சட்டங்கள் : மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு!

Jan 22, 2021 205 views Posted By : YarlSri TV
Image

வேளாண் சட்டங்கள் : மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு! 

புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்திவைப்பதற்குத் தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் குறித்த அறிவிப்பை விவசாயிகள் நிராகரித்துள்ளனர்.



அந்த சட்டங்களை முழுமையாக இரத்து செய்வதைத் தவிர வேறு எதையும் ஏற்க மாட்டோம் என்று விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.



மத்திய அரசு – விவசாயிகள் சங்கத்தினா் இடையே இன்று (வெள்ளிக்கிழமை) 11-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ள நிலையில் விவசாயிகள் இவ்வாறு அறிவித்துள்ளனர்.



முன்னதாக கடந்த புதன்கிழமை 10-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் “பேச்சுவாா்த்தையானது சுமுகமான சூழலில் நடைபெற்றது.



விவசாயிகள் ஒப்புக் கொண்டால் வேளாண் சட்டங்கள் அமுல்படுத்துவதை  ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டு வரை நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது” என  அறிவித்தாா்.



இந்நிலையில் அமைச்சரின் அறிவிப்பு குறித்து ஆலோசிக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கங்களின் கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.



அதன் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் ‘புதிய வேளாண் சட்டங்களை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் திட்டத்தை நிராகரிக்கிறோம்.



ஏற்கெனவே நாங்கள் கூறிவருவதுபோல வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை