Skip to main content

யாழில் புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது!

Jan 18, 2021 233 views Posted By : YarlSri TV
Image

யாழில் புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது! 

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறுத்தப்பட்டிருந்த புகையிரதே சேவைகள், இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.



அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு புகையிரதங்கள் இன்று புறப்பட இருக்கின்றது. முதலாவதாக காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30க்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6.10க்கு புறப்படுகின்ற உத்தரதேவி கடுகதி புகையிரதமும் காங்கேசன்துறையில் இருந்து காலை 9மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45க்கு புறப்படும் யாழ்.தேவி புகையிரத சேவையும் ஆரம்பமாகி இருக்கின்றது.



அவ்வாறே கல்கிசையில் இருந்து 5.55க்கும் 6.35க்கு கொழும்பிலிருந்தும் புறப்படும் யாழ்.தேவி புகையிரதமும் 11.50க்கு கொழும்பிலிருந்து புறப்படும் உத்தரதேவி புகையிரதமும் இன்று சேவையைஆரம்பிக்க இருக்கின்றது.



ஏனைய புகையிரத சேவைகள் 25ஆம் திகதி தொடக்கம் முக்கியமாக கொழும்பிலிருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட புகையிரதம் மற்றும் இரவு தபால் புகையிரதம் உள்ளிட்ட அனைத்து புகையிரத சேவைகளும் படிப்படியாக ஆரம்பமாக இருக்கின்றது.



பொதுமக்கள் வழமைபோன்று ஆசனங்களை யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் முற்பதிவு செய்து கொள்ள முடியும்.



அத்தோடு உங்களுக்கு தேவையான ஏதாவது விபரங்களுக்கு 021- 2222271 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினைமேற்கொண்டு அறிந்துகொள்ள முடியும்.



மேலும் பயணிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, புகையிரதத்தில் பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம் என யாழ்ப்பாண புகையிரத நிலையம் பிரதம புகையிரத அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை