Skip to main content

உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம்!

Jan 18, 2021 236 views Posted By : YarlSri TV
Image

உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம்! 

உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்கை சுற்றுலாத்துறைக்கு 42 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.



கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலைய செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில்,  பைலட் திட்டத்திற்கு அமைவாக குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளை அழைப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.



அதற்கமைய கடந்த வருடம் டிசம்பர் 28ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர், 180 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கைக்கான முதல் பயணிகள் விமானம் உக்ரைன் நாட்டில் இருந்து மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.



அதன் பின்னர் உக்ரைன் நாட்டு சுற்றுலாப்பயணிகள் கட்டங்கட்டமாக நாட்டிற்கு அழைத்துவரப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

11 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை