Skip to main content

தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங்கை இதுவரை வழங்கவில்லை – இந்திய உயர்ஸ்தானிகராலயம்!!

Jan 20, 2021 243 views Posted By : YarlSri TV
Image

தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங்கை இதுவரை வழங்கவில்லை – இந்திய உயர்ஸ்தானிகராலயம்!! 

தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங்கை இதுவரை வழங்கவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.



இந்தியாவில் இன்று (புதன்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசியினை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.



முதலாவது தடுப்பூசி தொகுதி பூட்டான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.



இந்தநிலையில், கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான அனுமதியை இலங்கையிடம் இருந்து எதிர்பார்த்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளார்.



தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங்கை இதுவரை வழங்கவில்லை எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.



இதேவேளை, பூட்டான், மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் மற்றும் ஷீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இந்திய அரசினால் முதற்கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை